(கோகுல்)
விளையாட்டில் சாதனை படைத்த களுதாவளை தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடை யிலான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் பாடசாலை ரீதியில் முதலாம் இடம் பெற்ற மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விளையாட்டுப்
போட்டி கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டு மைதானத்தில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம்
10 ஆம் திகதி வரை நடை பெற்றது. இதில் களுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலை 123 புள்ளிகளைப்
பெற்று மாகாணத்தில் முதலாவது இடத்தை சுவீகரித்துக்கொண்டது.
இங்கு நடைபெற்ற விளையாட்டுப்
போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப்பதக்கங்கள், 8 வெண்கலப்பதக்கங்களை தனதாக்கிக்கொண்டதுடன்,
9 விளையாட்டுகளில் புதிய சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளது.
மெய்வல்லுனர் போட்டியில்
ஆண்களும் பெண்களும் முதலாம் இடத்தை பெற்றதுடன், அஞ்சல் ஓட்டத்தில் பெண்கள் முதலாம்
இடமும் ஆண்கள் இரண்டாம் இடத்தையும் களுதாவளை தேசிய பாடசாலை பெற்றுள்ளது.
பாடசாலைக்கும் வலயத்திற்கும்
பெருமை தேடிக்கொடுத்த வீர, வீராங்கனைகள் கிராமத்தின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச்
செல்லப்பட் டனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற பொதுமக்கள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் பாடசாலை முன்றலில் பாண்ட் வாத்தியங்கள் முழங்க அதிதிகளினால் மாணவர்கள் அழைத்துச்
செல்லப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
போட்டிகளில் மாணவர்கள்
வெற்றிபெறக் காரணமாக இருந்த, வழிகாட்டிய உடற் கல்வி சார்ந்த ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும்
இவ்விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment