தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டம் நடாத்திய பரிசளிப்பு விழா.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டம் நடாத்திய பரிசளிப்பு விழா வாசகர்வட்டத் தலைவர் சி.விவேகானந்தம் தலைமையில் குருக்கள்மடம் பொது நூலகத்தில் புதன்கிழமை(12) நடைபெற்றது. இதன்போது கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர்களின் கலை நிகழ்வுகளும், அரங்கேறின.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் க.ஞானரெத்தினம், பிரதேசசபை செயலாளர் தா.அறிவழகன், சனசமூக நிலைய உத்தியோகத்தர் சி.குகநேசன் மற்றும் கிராமத்தின் பல முக்கியஸ்தர்கள் சங்கம், கழகங்கள் என்பவற்றின் தலைவர் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
16 வருடங்களாக தனது சொந்த நிதியிலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கான விசேட பரிசில்களை வழங்கி வரும் கலைவாணி வாசகர் வட்ட தலைவர் சி.விவேகானந்தம், தவராசா ஜெயசித்ரா ஆகியோரும், இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment