8 Sept 2022

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை விமர்சிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராஜபுத்திரனுக்கு என்ன அருகதையுண்டு. TMVP

SHARE

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை விமர்சிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராஜபுத்திரனுக்கு என்ன அருகதையுண்டு. TMVP

இளைஞர்களின் தியாகத்தால் உருவான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியையும் அதன் தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களையும் விமர்சிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கிய ராஜபுத்திரனுக்கு எந்த உரிமையும் கிடையாது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை(08) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

வெறும் ஆசனங்களை சூடாக்குவதற்காகவோ சொந்த நலனுக்காக சொத்து சேர்ப்பதற்காகவோ இளைஞர்களை சூடாக்கி போலி தேசியவாத அரசியல் செய்வதற்காகவோ இவ்ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்தவர்கள் அல்ல தமிழ் மக்கள் விடுதலை புலிகள்.

கிழக்கில் தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்தி கல்வி, கலை, கலாசார, பொருளாதார மேம்பாட்டிற்காக எம்மக்கள் மாற்று அரசியல் தலைமைகளிடம் மன்டியிடாது தம்மை தாமே ஆளாக்கூடிய கிழக்கு தலைமைகளை உருவாக்குவதற்காக பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தின்பால் ஆயிரக்கணக்காக இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் பயணிக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகளையும் கிழக்கு மக்களின் மீட்புக்காக தூரநோக்கு சிந்தனையின்பால் மக்களின் பேராதரவையும் பெற்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களையும் விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கிய ராஜ புத்திர அவர்களின் அநாகரிகமான செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


SHARE

Author: verified_user

0 Comments: