7 Jul 2022

பொது போக்குவரத்து சேவை விரிவாக்கப்படுத்படல் வேண்டும்-பூ.பிரசாந்தன் கோரிக்கை.

SHARE

பொது போக்குவரத்து சேவை விரிவாக்கப்படுத்படல் வேண்டும்-பூ.பிரசாந்தன் கோரிக்கை.

அரச அதிகாரிகளும் பொது மக்களும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த முனையும் நிலையில் பொது போக்குவரத்து சேவையானது விசேட பொறிமுறையூடாக விரிவுபடுத்தப்படவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்  மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கு அவர் வியாழக்கிழமை(07) அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெருவித்துள்ளார் மேலும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது

நாடு தற்போது எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளவிய ரீதியில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அரசாங்கமானது பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டியினை பயன்படுத்துவதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை தாங்கள் அறிந்தவிடயமே அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிகளவானவர்கள் அரச ஊழியர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் என அனைவரும் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்த முனையும் நிலையிலும் பொது போக்குவரத்து சேவையானது விசேட பொறிமுறையூடாக இலங்கை போக்குவரத்து சபை (ஊவுடீ) மற்றும் மாகாண போக்கு வரத்து  சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகளின்  நேர ஒழுங்கமைப்பு பயணிகளின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். அத்துடன் அத்தியாவசிய நிலையினைக்கருத்திற் கொண்டு விஷேட சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்

கடந்த ஒரு வாரமாக பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தியதன் மூலம் நான் கண்ட அனுபவத்தின்படி அரச அதிகாரிகளும் வைத்தியர்களும் பொதுப் போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதற்கும் ஏனைய தொழில் நிலையங்கள் மற்றும் சேவைகளுக்கு செல்வதற்கும் போக்குவரத்து சேவையானது போதுமானதாக காணப்படவில்லை அத்தோடு தூர இடங்களுக்கு பயணிக்கின்ற பொது போக்குவரத்து சேவையில் குறுந்தூரத்திற்கு பயணிக்கின்ற அதிகாரிகளை ஏற்றிச் செல்வதில் பல அசௌகரியங்கள்  எதிர்நோக்கப்படுகின்றது.

ஆகவே தற்போது ஏற்பட்டிருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு நிலையில் குறுகிய நிலையிலாவது அலுவலகங்களையும் மற்றைய சேவைகளையும் வழங்க வேண்டுமாக இருந்தால் போக்குவரத்து சேவை என்பது மிக மிக அத்தியாவசியமானதொன்றாக உணரப்பட்டிருக்கின்றது

அந்த வகையில் இப்போது போக்குவரத்து சேவை பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன்; குறித்த போக்குவரத்து சேவையினை வழங்குகின்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தங்களது தொழிலுக்கு செல்வதற்கான தங்களது பிரத்தியேக (மோட்டார் சைக்கிள்களுக்கு) வாகனங்களுக்கான எரிபொருள்; தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் காரணமாக பலர் வேலைக்கு செல்ல முடியாமல் விடுமுறையிலுள்ளதாகவும்  அதன் காரணமாக போக்குவரத்து சேவை வழங்குவதில் பல இடையூறுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் இலங்கை போக்குவரத்து அதிகார சபை அதேபோன்று மாகாண போக்குவரத்து சேவை திணைக்கள பணிப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சேவையினை ஓரளவேனும் வழங்குவதற்கு போக்குவரத்து சேவையினை  அத்தியாவசிய சேவையாக கருத்திற்கொண்டு இவர்களுக்கான  எரிபொருட்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதோடு முச்சக்கரவண்டி சாரதிகளுடம் தற்களது போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான எரிபொருள் விநியோகம் செய்யப்பதுததற்கும் ஆவன செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE

Author: verified_user

0 Comments: