7 Jul 2022

ஊடகவியலாளர் சக்திவேல எழுதிய களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன்; பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா.

SHARE

ஊடகவியலாளர் சக்திவேல எழுதிய களுமுந்தன்வெளி  முத்துமாரியம்மன்; பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான .சக்திவேல் எழுதிய பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா வியாழக்கிழமை (07.07.2022) களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் முன்றில் இடம்பெற்றது.

குறித்த இறுவெட்டிற்கு கிழக்கிலங்கையின் புகழ்பூத்த நிஸ்கமானந்தராஜா டனூஷ்ஷியன் இசையமைத்துள்ளதுடன், இலங்கை வானொலி தேசிய கலைஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலைச்சுடர் வீ.பத்மசிறி  மற்றும் புகழ்பூத்த பாடகி செல்வி சுலக்ஷனி புவனேந்திரராசா ஆகியோர் இணைந்து பாமாலையினை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் விநாயகர் கலைக்கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான மு.சவுந்தரராசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக களுமுந்தன்வெளி மாணிக்கப் பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் பிரதம குரு சிவ ஸ்ரீ .கு.திருச்செல்வம் குருக்கள் அவர்களும், பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புல தொழில்நுட்பத்துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தின் அதிபர் நா.ராமேஸ்வரன், களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தலைவர் ஞா.யோகநாதன், செட்டிபாளையம்ம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் தலைவர் யோகராஜா,முன்னாள் அதிபர் வீ.கோபாலபிள்ளை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

விநாயகர் கலைக்கழகத்தின் உபதலைவரும் ஆசிரியருமான .தரணிதரனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவை  சங்கத்தின் மட்டக்களப்பிற்கான தலைவர் .வசந்தராஜா அவர்களினால் இறுவெட்டு வெளியீட்டு வைத்தார்.

இறுவெட்டின் முதற் பிரதியை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஆலோசகருமான தேசபந்து எம்.செல்வராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இறுவெட்டின் கவிஞர் நயவுரையினை தொடர்ந்து கவிஞர் .ஜீவரெட்ணம் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தியதுடன்ஏற்புரையை பாடலாசிரியரும்சிரேஸ்ட ஊடகவியலாளருமான .சக்திவேல் அவர்களும்நன்றியுரையை விநாயகர் கலைக்கழகத்தின் செயலாளர் யோகிவேதன் அவர்களும் நிகழ்த்தியதுடன்நிகழ்ச்சி தொகுப்பை கலைக் கழகத்தின் ஆலோசகர் தெ.சிவபாதம் மேற்கொண்டார்.

இதன்போது பாடலாசிரியரும்ஊடகவியலாளருமான வடிவேல் சக்திவேல் அவர்களுக்கு கலைக்கழகத்தினரால்பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





























SHARE

Author: verified_user

0 Comments: