மட்டக்களப்பு நகரில் சீரான முறையில் எரிபொருள் வழங்கி வரும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஒரே ஒரு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் சீரான முறையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை(17) முன்னுரிமை அடிப்படையில் கற்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளுடன் வைத்தியசாலைக்குச் செல்வோர், மாற்றுத்திறனாளிகள், திடீர் மரண விசாரணை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சுயதொழிலில் ஈடுபடுவோர், விவசாயிகள், இணக்கசபை உறுப்பினர்கள், சுற்றுலாப்பிரயாணிகள், மதகுருமார், வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ள மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய நிருவாகத்தினர் உள்ளிட்ட பலருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வரிசைக்கிரமமாக மிகவும் சீரான முறையில் பெற்ரோல் வழங்கப்பட்டன.
குறித்த எரிபொருள் நிலையத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான தேசபந்து எம்.செல்வரா
ஜா அவர்கள் எரிபொருள் நிலையத்திலேயே நின்று மக்களை ஒழுங்குபடுத்தி சீரான முறையில் அனைவருக்கும் பெற்றோல் வழங்குவதற்கு வசதிகளை மேற்கொண்டிருந்தார்.
ஏரிபொருள் தட்டுப்பாடான இக்காலகட்டத்தில் சீரான முறையில் அனைவருக்கும் பெற்றோல் வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்த குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தேசபந்து எம்.செல்வராஜா அவர்களுக்கு மக்கள் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment