எமது மக்களின் உணவு பாதுகாப்புக்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துவோம் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கூட்டத்தில் கோரிக்கை.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்வளம் நிலவளம் என அனைத்து வளங்களும் காணப்படுகின்ற போதும் அதனை முறையாக முகாமை செய்யாத காரணத்தினால் தொடர்ந்தும் ஏனைய மாவட்டங்களையும் பிற இறக்குமதிகளையும் உணவு தேவைக்காக எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. அதன் அடிப்படையில் தற்போது எமது நாடு எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத் தேவை போன்றவற்றை எமது வளங்களை முழுமையாக பயன்படுத்தி வெற்றிகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் இருக்கின்ற நீர்நிலைகளையும் அதேபோன்று நிலங்களையும் முழுமையாக பயன்படுத்தப்படுத்துவதன் ஊடாக நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும்.
நாட்டின் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியின் கோட்பாடுகளுக்கு அமைய உணவு பாதுகாப்பு விசேட திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அத்தோடு இணைந்ததாக மாவட்ட ரீதியாக விசேட திட்டம் ஒன்று ஒழுங்கமைக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக தரிசாக இருக்கின்ற அரச காணிகள் அதே போன்று வன இலாகாவுக்குரிய ஒதுக்கு காணிகள் என்பவற்றை மக்கள் பயன்படுத்தி விவசாயச் செய்கை மற்றும் தானிய உற்பத்தி செய்யக் கூடிய வாய்ப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.
காலதாமதமின்றி காணிகளை குறுகிய கால குத்தகை அடிப்படையில் உடனடியாக கிராமிய விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
எங்கெங்கு எவ்விதமான பயிரிடல்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்
தப்பட்ட உயரதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளடக்கிய வகையில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு இதனூடாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(05) இடம்பெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், கோரளைப்பற்று பிரதேச தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச குழு தலைவர்களூம் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment