21 May 2022

விவசாய மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ள களுமுந்தன்வெளி கிராம விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

விவசாய மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ள களுமுந்தன்வெளி கிராம விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

நிலைபேறான சேதன விவசாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ்  கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் விவசாயத் திணைக்களத்தின்  வழிகாட்டலில், விவசாய தொழில் நுட்ப மாத்திரி கிராமமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமம் தெரிவு செய்யப்பட்டு வலுவூட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் வலுப்படுத்தப்பட்டு வரும் களுமுந்தன்வெளிக் கிராம விவசாயிகளுக்கு, விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அப்பகுதி வவிசாயப் போதனாசிரியர் .சகாப்தன் தலைமையில் களுமுந்தன்வெளிக் கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, மாவட்ட விவசாய பணிப்பாளர் இரா. ஹரிஹரன் போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் துசாஞ்சனன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், வவிசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் ரி.மேகராசா, விவசாய பாடவிதான உத்தியோகஸ்த்தர்கள், அப்பகுதி விவசாயிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விவசாயிகளுக்குத் தேவையான பல லெட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள், வழங்கி வைக்கப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: