இம்முறை சித்திரைப் புத்தாண்டு றமழான் பண்டிகை வியாபாரம் களைகட்டவில்லை. சலிப்பில் வர்த்தகர்கள்.
இம்முறை தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு வியாபார சந்தையும் றமழான் பண்டிகை வியாபாரமும் களைகட்டவில்லை என்பதனால் நகர வர்த்தகர்கள் சலிப்பில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த விலையேற்றம் பொருட்களின் பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை மின்வெட்டு என்பனவற்றால் மக்கள் பண்டிகைகளில் நாட்டங்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்காகவும் றமழான் பண்டிகைக்காகவும் உடுதுணிகளையும் இன்னபிற பொருட்களையும் கொள்வனவு செய்யவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்காகவும் றமழான் பண்டிகைக்காகவும் களை கட்டியிருக்க வேண்டிய பஸார் பகுதி வெறிச்சோடிக் காணப்படுவதாக வர்த்தகர்கள் மேலும் கூறுகின்றனர்.
ஒட்டு மாத்தத்தில் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை அடிமட்ட அன்றாடங் காய்ச்சிகளான கூலித்தொழிலாளர்கள் தொடக்கம் அனைத்து வகுப்பாரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது என பாதிக்கப்பட்டுள்ளோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.
0 Comments:
Post a Comment