களுமுந்தன்வெளியில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி வைப்பு.
சேதன விவசாயச் செய்கையின் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஆலோசனையின் பெயரில் சிறுபோக வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரை மானியத் திட்டத்தின்கீழ் பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த விதைநெல் வழங்கி வைக்கும் நிகழ்வுவொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் செவ்வாய்கிழமை(12) 28 ஏக்கருக்குரிய விதைநெல் இதன்போது விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் பி.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பிரத்திப் பணிப்பார் வி.பேரின்பராசா, உதவி விசாயப் பணிப்பாளர் த.மேகராசா, உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதைநெல்லைப் பகிர்ந்தளித்தனர்.
0 Comments:
Post a Comment