மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்துவைப்பு.
அந்தவகையில் இந்நிகழ்வானது மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் செவ்வாய்கிழமை(29) நடைபெற்றது.
தேசிய கொடியேற்றியதனையடுத்து பயன்தரு மரங்கள் அதிதிகளினால் நடப்படதன் பின்னர் வீட்டுத்தோட்ட பயிர்களும் நடப்பட்டது. அதனையடுத்துதெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த்> பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்> விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment