18 Jan 2022

மட்டக்களப்பு பெரியகல்லாறு சூர்யா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை கலாசார விளையாட்டு நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு பெரியகல்லாறு சூர்யா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை கலாசார விளையாட்டு நிகழ்வு.

தமிழ் பண்பாட்டு பவனியுடன் அதிதிகளை வரவேற்று மைதானம் வரை ஊரவலமாக அழைத்து வந்தனர் அதனையடுத்து தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது அதனையடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமானது.

முதலாவது நாகழ்வாக வரவேற்பு நடனம் இடம்பெற்றதனை தொடர்ந்து பாரப்பரிய விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியன.

இளவட்டக்கல் தூக்குதல் வழுக்கு மரம் ஏறுதல், தலையனைச் சமர், முட்டி உடைத்தல், கயிறுழுத்தல்,  நீருக்குள் அப்பிள் சாப்பிடுதல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், போன்ற 15க்கு மேற்பட்ட முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

சூரியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருனாகரன், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் L.K.W.K.சில்வா, கிழக்கு மாகாணசபை செயலாளர் M.கோபாலரெட்ணம் விளையாட்டு கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.      
























SHARE

Author: verified_user

0 Comments: