23 Jan 2022

மட்டக்களப்பு—கல்முனை பிரதான பிரதான வீதியில் பாரிய கோர விபத்து. தந்தை தலைநசுங்கி பலி—மகன் படுகாயம்.

SHARE

மட்டக்களப்பு—கல்முனை பிரதான  பிரதான வீதியில் பாரிய கோர விபத்து.

தந்தை தலைநசுங்கி பலி—மகன் படுகாயம்.மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்னால் சனிக்கிழமை (22)  மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற பாரிய கோர விபத்துச் சம்பவத்தில் தந்தை தலை சிதறி பலியானதுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் ஆரையம்பதி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி தந்தையும் மகனும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பிக்கப் வாகனம் மோதிவிட்டு தப்பியோடியுள்ளது. பிக்கப் மோதிய வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த கனரக நெல் அறுவடை செய்யும் இயந்தரத்தினுள் மோட்டார் சைக்கிள் சிக்கி தந்தை  நசுங்குண்டு ஸ்தலத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசார் விசபரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: