புகையிரதம் தடம் புரண்டதால் மட்டு.கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை இரத்து.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சரக்குப் புகையிரதம்
வெள்ளிக்கிழமை (31)மாலை கெக்கிராவைக்கும் கலாவவெக்குமிடையில் தடம் புரண்டதால் வெள்ளிக்கிழமை
இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த
இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத
நிலைய பிரதம அதிபர் ஏ.பேரின்பராசா தெரிவித்தார்.
குறித்த புகையிரத பாதை சீர் செய்யப்பட்டவுடன் மீண்டும் குறித்த புகையிரத சேவை இடம்பெறுமெனவும்
அவர் தெரிவித்தார். வழக்கமாக இரவு 8.15 மணிக்கு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து குறித்த புகையிரதம் புறப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment