21 Nov 2021

மனை சார்ந்த பொருளாதார ஊக்குவிப்பதற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிழக்கில் 82 ஆயிரம் குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு.

SHARE

மனை சார்ந்த பொருளாதார ஊக்குவிப்பதற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிழக்கில் 82 ஆயிரம்  குடும்பங்களுக்கு  ஊக்குவிப்பு.

கிராமிய மக்களின் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மனை சார்ந்த பொருளாதார பயிற்ச்செய்கைகளை ஊக்குவிப்பதற்காக எதிர்வரும் ஆண்டில் 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்    இத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் 82 ஆயிரம்  குடும்பங்களை இலக்குவைத்து மனை சார்ந்த பொருளாதார பயிற்ச்செய்கைகளை ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதான பயிற்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து சனிக்கிழமை(20) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இன்று நாடு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது மக்கள் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்த்து முகம் கொடுக்கக்கூடிய வகையில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது இதற்காக கிராமிய மக்களின் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டு மஞ்சள் , இஞ்சி , பாசிப்பயறு , உளுந்து ,உள்நாட்டு கிழங்கு ,என மனை சார்ந்த பொருளாதார பயிற்ச்செய்கைகளை ஊக்குவிப்பதற்காக விசேட வேலைத்திட்டங்கள் பின்தங்கிய பிரதேச கிராமபிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2020 ஆரம்ப காலத் தொடக்கம் covid-19 தொற்றின் அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க  பாரிய சவால்களை சந்திக்க நேரிட்டது அரசின் நிலையான கொள்கை திட்டத்தினூடாக உள்ளூர் உற்பத்திகளை அதி கரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது   இந்த உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தில் பின்தங்கிய பிரதேச கிராமபிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் ஊடாக கிராமிய மக்களின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியை மேம்படுத்த 6500 குடும்ப குடும்பங்களுக்கு 200 மில்லியன் ரூபா  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமிய மக்களின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு இஞ்சி உற்பத்தி பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக 6500 குடும்பங்களுக்கு 200 மில்லியன் ரூபாவும் கிராமிய மக்களின் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டு பாசிப்பயறு உற்பத்தியை அதிகரிக்க 6500 குடும்பங்களுக்கு 200 மில்லியன் ரூபாவும் கிராமிய மக்களின் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டு உளுந்து பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்காக 6500 குடும்பங்களுக்கு 200 மில்லியன் ரூபாவும் கிராமிய மக்களின் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டு கிழங்கு உற்பத்தி பயிர்ச்செய்கைகளை மேம்படுத்துவதற்காக 13 700  குடும்பங்களைச் சார்ந்த குடும்பங்களுக்கு குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபாவும் ,கலப்பின பயிற்சிகளுக்காக 48 ஆயிரம் குடும்பங்களுக்கு 100 மில்லியன் ரூபாவும் எதிர்வரும் ஆண்டில் எதிர் வருமானத்திற்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாக என அவர் மேலும் தெரிவித்தார்.




 


SHARE

Author: verified_user

0 Comments: