உதிரம்கொடுத்து உயிர்காப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு.
உதிரம்கொடுத்து உயிர்காப்போம் எனும் தொனிப்பொருளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் அகவைதினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இன்றையதினம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது முற்போக்கு தமிழர் அமைப்பின் உறவுகளின் உதிரக்கொடையளிப்புடன் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது இந்நிகழ்வில் முற்போக்குதமிழர் அமைப்பின் அமைப்பாளர் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உதிரதானம் வழங்கினர் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பினை இராஜாங்க அமைச்சரின் பிரேத்தியேக செயலாளர் சதாசிவம் மயூரன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தினார்.
0 Comments:
Post a Comment