ஆனைகட்டியவெளி சின்னவத்தை பிரதான வீதி உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு.
ஒரு லெட்சம் கிராமிய வீதிகள் புணரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 51 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் 2 இலோ மீற்றர் நீளம் கொண்ட ஆனைகட்டியவெளி சின்னவத்தை பிரதான வீதியின் புணரமைப்பு வேலைகள் நிறைவு பெற்று புதன்கிழமை(29) மாலை உத்தியோக பூர்வமாக திறந்து மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீதியைத் திறந்து வைத்தானர்.
மேலும் இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியலாளர் பி.வரதன், போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டபலர் இதன்போது கலந்து கொண்டிருதனர்.
0 Comments:
Post a Comment