மண்முனைப் பற்றில் நடைபெற்ற கவிதைகளோடு
பேசுவோம் எனும் நிகழ்வு.
கலாசார பேரவை உப தலைவரும், உதவிப்பிரதேச செயலாளருமான கி.இளம்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச கலாசார அதிகாரசபையின் நிறைவேற்று தலைவரும், பிரதேச செயலாளருமான தெட்சணகௌரி தினேஷ் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், கவிஞர் த.கோபாலகிருஸ்ணன், ஏனைய கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், என பாலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மறைந்த கலைஞர்களின் உருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டதைத் தொடர்ந்து மண்முனைப்பற்று கலைஞர்னய் மற்றும் கவிஞர்களின் ஆக்கங்களாக வெளிவந்த புத்தகக் கண்காட்சிகூடம் திறந்து வைக்கப்பட்டது.
குவியரங்கம் இடம்பெற்று மூத்த கலைஞர்கள
மற்றும் கவிஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பல்வேறு நிகழ்வுகளும் நிகழ்வுகளும் ஆற்றுகi
செய்யப்பட்டன.






0 Comments:
Post a Comment