கணினி கல்வியூடான இணையவழி கற்றலுக்கான நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறை.
வலுவிழந்து காணப்படும் சமூகத்தினை கருத்தில் கொண்டு மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் வெளிநாடு புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உதவியினூடாக பல்வேறு மனிதாபிமான செயற்றிட்டங்களை மட்டக்களப்பு மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு செயற்பாடாக கணினி கல்வியூடான இணையவழி கற்றலுக்கான நவீனமயப்படுத்தப்பட்ட வகுப்பறை நிலையத்தின் திறப்பு நிகழ்வு செவ்வாய்கிழமை (26) மாலை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தலைமையில் மயிலம்பாவெளியில் அமைந்துள்ள வாழும் கலை நம்பிக்கை கிராம சிறுமிகள் காப்பகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்க ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் அத்தோடு மட்.மயிலம்பாவெளிp ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் பாஸ்கரன் மற்றும் சிறுமியர் காப்பக முகாமையாளர், உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வகுப்பறையினை அமைப்பதற்காக மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் நன்கொடையாளர்களான ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த திருமாவளவன் மற்றும் கரிகால்வளவன் ஆகியோரின் அமரத்துவமடைந்த பெற்றோரான செல்லையா சச்சிதானந்தசிவம் மற்றும் திருமதி.தயாநிதி சச்சிதானந்தசிவம் ஆகியோரின் நினைவாக இதற்கான நிதியை வழங்கியிருந்தனர்.
பின்தங்கிய கிராமங்களில் வாழ்கின்ற மாணவ மாணவிகள் இந்த இணைய வழி கற்றலில் சந்தர்ப்பம் கிடைக்காமல் பின்தங்கி செல்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் இந்த சிறுமி காப்பக மாணவர்கள் மிகப்பெரும் பயனை பெற்றுள்ளனர். இதற்கு உதவி செய்த மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் நன்கொடையாளர்களிற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இதன்போது கலந்து கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment