மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்படும் குளங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனும் செவ்வாய்கிழமை (14) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் 3 கோடி ரூபாய் செலவில் 87 நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் நிலையில் அவை தொடர்பான முன்னேற்றங்களை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோர் கள விஜயம் ஒன்றின் ஊடாக நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக விவசாயிகளுக்கு சிறந்த நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு நாடெங்கிலும் ஐந்தாயிரம் குளங்களை புணரமைக்கும் வாரி சௌபாக்கியா செலுமை அபிவிருத்தித் திட்ட பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் ஊடாக புணரமைக்கப்பட்டுவரும்
மீகாகண்டி குள அணைக்கட்டு புனரமைக்கப்படுவதன் மூலம் இப்பகுதியில் 40 ஏக்கர் நெற்செய்கையினை மேற்கொள்ள முடிவதுடன், வாரியடிச்சேனை அணைக்கட்டு புனரமைப்பின் மூலம் 50 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுவருவதற்கு மேலதிகமாக 25 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.
அத்துடன் கொக்குவான் அணைக்கட்டும் புனரமைக்கப்படவுள்ளதுடன், இத்திட்டங்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டு இதன் முன்னேற்றங்கள் தொடர்பில் கண்காணித்துள்ளனர்.
இதன்போது மத்திய அரசின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி நாகரெட்ணம் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இத்திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 பிரதேச
செயலாளர்கள் பிரிவுகளைச் சேர்ந் 70 குளங்களும் 18 அணைக்கட்டுக்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டம் நிச்சயமாக சுபீட்சத்தை
நோக்கி நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment