மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரசே சுகாதார வைத்திய பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரசே சுகாதார வைத்திய பிரிவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வியாழக்கிழமை (08) தினம் காஞ்சிரங்குடா, பன்சேனை, கொத்தியாபுலை, இலுப்படிச்சேனை,
நரிப்புல்தோட்டம், மகிழவட்டவான்,ஆயித்தியமலை -வடக்கு, ஆயித்தியமலை - தெற்கு ஆகிய கிராம
பிரிவுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள்
ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்
நா.மயூரனின் வழிகாட்டலில் தற்பொழுது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment