14 Jun 2021

மட்டு.மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்.

SHARE

மட்டு.மாவட்டத்தில்  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமைக்கு அமைய மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கான தேவைப்பாடுகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில்கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுணருமான வைத்தியகலாநிதி எம்.திருக்குமரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சுகாதாரப் பிரிவில் 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.












SHARE

Author: verified_user

0 Comments: