நடமாட்டத் தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாவட்ட சிகை ஒப்பனையாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளையும், தடுப்பூசியையும் வழங்குமாறு கோரிக்கை.
செவ்வாய்கிழமை(01) இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இத்னபோது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 கிளைச் சங்கங்களைச் சேர்ந்த 365 இங்கு மேற்பட்ட சிகை ஒப்பனையாளர்களை உள்ளடக்கிய 9 ஆயிரம் குடும்பங்கள் தற்போது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். எனவே அரசாங்கமும், தனவந்தர்களும், அரச சார்பற்ற அமைப்புக்களும், நிவாரணங்களை வழக்கிவருவதை அறிகின்றோம்.
எமது சங்கத்தைச் சேர்ந்த பலருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 கொடுப்பனவைப் பெறுவதிலும் சிக்கல் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றையும் கருத்திற் கொண்டு எமது சங்கத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கும், அரசும், அரச சாரபற்ற அமைப்புக்களும், வாழ்வாதார ரீதியிலான உதவிகளை வழங்க உடன் முன்வர வேண்டும். தற்போது மாணவர்களின் கற்றல் இலத்திரனியல் வழிமுறை ஊடாக நடைபெறுவதனால் எமது பிள்ளைகளின் கற்றலுக்கும் உதவுவதற்கு முன்வரவேண்டும்.
இந்நிலையில் எமது மட்டக்களப்பு மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் விரைவில் கொவிட் - 19 தடுப்பூசியை வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment