12 May 2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை - இரத்தக் கொடையாளர்களை நாடும் இரத்த வங்கியினர்

SHARE

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் தொற்றுப்  பரவல் அச்சுறுத்தல் காரணமாக  தற்போது  மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளதாக  போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்ததான  முகாம்கள்   கொவிட் -19 தொற்று காரணமாக இரத்து  செய்யப்பட்டுள்ளமையினால்  இரத்த வங்கியின் குருதி இருப்பில்  பற்றாக்குறை  ஏற்பட்டுள்ள நிலை  காரணமாக அன்றாடம் நோயாளர்களுக்கு  சிகிச்சைக்கான குருதி  வழங்குவதில் நெருக்கடி  ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும்   தலசீமியா நோயாளர்கள், புற்றுநோயாளர்கள், அத்துடன் கற்பகாலத்தில் ஏற்படும் குருதியிளப்பு, விபத்துக்களின் போது ஏற்படும் குருதியிளப்பு நிலமைகளின்   குருதியை வழங்க வேண்டிய தேவையுள்ளதுடன்  இதேவேளை  களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கும்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து குருதி வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே குருதி வழங்க விரும்பும் கொடையாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலயின் இரத்த வங்கி பிரிவுக்கு வருகை தந்து  குருதியினை  வழங்கமுடியும்   இதேவேளை இரத்ததானம் செய்வதற்கு விரும்பும் பொதுமக்கள் 065-2226116 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு இரத்ததானம் செய்வதற்கான  முன்பதிவை மேற்கொள்ள  முடியும் என வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்திய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: