அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்.பட்.களுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு.
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்.பட்.களுதாவளை ம.வி.தேசிய பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 232 மாணவர்களில் 166 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவுக்கு விண்ணப்பிக்க முடியும். இதில் உயிரியல் துறையில் 5 பேரும் பௌதிகவியல் துறையில் 3 பேரும் கலைத்துறையில் 74 பேரும், வர்த்தகத்துறையில் 11 பேரும் பொறியியல் தொழினுட்பத்துறையில் 44 பேரும் மற்றும் உயிர்முறைமைகள் தொழினுட்பத்துறையில் 29 பேரும் உள்ளடங்குவர்.
ச.கிசாந்த் மருத்துவ பீடத்துக்கும், எம்.விஜீவன் உயிர்முறைமைகள் தொழினுட்பத்துறையில் மாவட்டத்தில் முதல் நிலையினையும், ஜெ.ஹினுஷான் பொறியியல் தொழினுட்பத்துறையில் மாவட்டத்தில் இரண்டாம் நிலையினையும், எஸ்.விஜிதா, உயிர்முறைமைகள் தொழினுட்பத்துறையில் மாவட்டத்தில் மூன்றாம் நிலையினையும் பெற்று பாடசாலைக்கு பெருமையினை தேடிக் கொடுத்துள்ளனர். இவர்களை வழிப்படுத்திய அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெற்றோருக்கும் பாடசாலையின் அபிவிருத்தி சங்கமும் பழைய மாணவர் சங்கமும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
0 Comments:
Post a Comment