மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ தினமான இன்று 07.04.2021 திகதி பிற்பகல் 6.30 மணியளவில் தனியார் கட்டடத்தின் முற்பகுதியில் திடீரென தீப்பற்றிய போது அதனை அவதானித்த அருகிலுள்ள வியாபார நிலையங்களின் ஊழியர்கள் தீயை அனைக்க முற்பட்டு ஏனைய வியாபார நிலையங்களிற்கு தீ பரவாவண்ணம் தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரைக்கும் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment