மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியனாறு குளத்தை
அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது.
தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் சந்தேக நபர் ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, கண்டியநாறு பகுதி குளத்தருகில் திங்கட்கிழமை (08.09.2025) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிசார் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பொலிசார் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது 1,80,000 மில்லி லீட்டர் ஒரு பரலுடன் 20 வயதுடைய உன்னிச்சை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் 10 கோடா பரல்களும், 12 வெற்று பரல்களும், கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட விருந்ததாகவும் கொக்கட்டிச்சோலை பொலீசார் தெரிவித்தனர்.
இச்சோதனை நடவடிக்கையின்போது பிரதான பொலிஸ் பரிசோதகரும், நிலைய பொறுப்பதிகாரியுமான அபேரத்ன பொலிஸ் தலமையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதான சந்தேக நபரையும், பொருட்களையும்
நீதிமன்னிறல் முன்னிலைப் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment