8 Apr 2021

ஆரையம்பதியில் இடம் பெற்ற "அன்பான வணிகன் " சமுர்த்தி சந்தை

SHARE

ஆரையம்பதியில் இடம் பெற்ற  "அன்பான வணிகன் " சமுர்த்தி சந்தை.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி திணைக்களத்தால்  "அன்பான வணிகன் " எனும் சிந்தனையில் சமுர்த்தி சந்தை தற்போது நாடுபூராவும் நடைபெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் "அன்பான வணிகன் " சமுர்த்தி சந்தை 08.04.2021 இன்று ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் நவரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சந்தையினை ஆரம்பித்துவைத்தார்கள்.

சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் விற்பனையும் இடம் பெற்றது.

இதன்போது சிறந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அதே வேளை தாளங்குடா சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டிலும் "அன்பான வணிகன் " சமுர்த்தி சந்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















SHARE

Author: verified_user

0 Comments: