இதன் முதற்கட்டமாக 46 குடும்பங்களுக்கான காணிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்று (15) பிற்பகல் 4.00 மணியளவில் கிரானில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்போர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டவர்களின் எதிர்கால நலன்கருதி இக் காணிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பயனாளிகளின் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு, பொருளாதாரம் விருத்தி போன்ற விடயங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக நன்கொடையாளர் வி.லவக்குமார் தெரிவித்தார்.
இதில் பொது தேவைகளான மத ஸ்தலங்கள், பாடசாலை போன்றவற்றிற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களின் எதிர்கால தேவை மற்றும் வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment