இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் தொண்டர்களுக்கு செஞ்சிலுவைக் கொள்கை விளக்கமளிக்கும் நிகழ்வு.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் புதிய தொண்டர்களுக்கு செஞ்சிலுவைக் கொள்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் வெள்ளிக்கிழமை(09) நடைபெற்றது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைக் காரியாலயத்திலிருந்து வருகை தந்திருந்த மனித விழுமியங்களுக்குரிய முகாமையாளர் மனோஜ் றொட்றிக்கோ, கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி.பி.வேணுசா, மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் பொருளாளரும், கொள்கை பரப்புரைத் தொண்டருமான வ.சக்திவேல் இதன்போது வளவாளராக கலந்து கொண்டு தொண்டர்களுக்கு செஞ்சிலுவை அமைப்பின் உருவாக்கம், அதன் கொள்கைகள், செயற்பாடுகள், நிருவாகக் கட்டமைப்புக்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
0 Comments:
Post a Comment