தேசிய போக்குவரத்து தினத்தையொட்டி மட்டு.புகையிரத நிலையத்தில் மரநடுகைத் வேலைத்திட்டம் ஆரம்பம்.
தேசிய போக்குவரத்து தினமாகும்.இதனையொட்டி மட்டக்களப்பு புகையிர நிலையத்தில் மரம் நடுகை வைபவம் இடம்பெற்றது.
புகையிர நிலைய பிரதம அதிபர் ஏ.பேரின்பராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற வைபவத்தில் மக்கள் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் இ.பீ.ஏ.சிசிரகுமார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மக்கள் வங்கி பிரதி மாவட்ட முகாமையாளர் எஸ்.இளங்கோ தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை மட்டக்களப்பு பொறுப்பதிகாரி பி.ரவிசங்கர் உள்ளிட்ட புகையிரத நிலைய உயர் அதிகாரிகள் பலரும் கொரோனா சுகாதார நடை முறைகளைப் பேணி கலநது கொண்டனர்.
புகையிரத நிலைய வளாகம் முழுவதிலுமாக பயன்தரும் மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.
0 Comments:
Post a Comment