15 Mar 2021

நீண்டகாலத்தின் பின்னர் மட்டு.வீதியின் பெயர் ஆலய வீதியாக பெயர் மாற்றம் - பா.உ.சந்திரகாந்தன் பெயர்பலகையை திரை நீக்கம் செய்தார்.

SHARE

நீண்டகாலத்தின் பின்னர் மட்டு.வீதியின் பெயர் ஆலய வீதியாக  பெயர் மாற்றம்  - பா..சந்திரகாந்தன் பெயர்பலகையை திரை நீக்கம் செய்தார்.

மிக நீண்டகாலமாக சேமக்காலை  வீதி என்ற பெயரில்   பயன் படுத்தப்பட்டு வந்த கள்ளியங்காடு மயான  வீதி   ஆலய வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மட்டக்களப்பு எல்லை வீதியில் இருந்து  கள்ளியங்காடு மயான  பாதை  ஊடாக  இருதயபுரம் ஸ்ரீ குமரத்தன்  ஆலயம் வரை செல்லும் வீதியானது  சேமக்காலை  வீதி  என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு  வந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை(14) முதல்  ஆலய வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு  அதற்கான பெயர் பலகை  திறந்து வைக்கப்பட்டது.

ஆலயங்களின்  நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன்   நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதிக்கான பெயர்ப்பலகை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆலயங்களின்  நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: