தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவில் 4 வருடமாக கடமையாற்றும் கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் நிரந்தர நியமனம் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடந்த 4 வருடமாக கடமையாற்றிவரும் கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் தங்களை நிரந்தர நியமனமாகக நியமிக்குமாறு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பு புகையிரதத்தின் முன்னால் முன்னெடுத்திருந்தனர்.தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடந்த 2007 ஆம் ஆண்டின் ஆரம்கக் கட்டத்தில் நடளாவிய ரீதியில் நல்லாட்சி அரசாங்தக்தினால் “டெங்கு கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள்” என நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்காக இவர்களுக்கு மாதாந்தம் 22000 ரூபா வேதனம் வழங்கப்பட்டு வரப்படுகின்றது.
ஆனாலும் இவர்கள் இதுவரையில் இவர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தல முடிவுற்ற காலப்பகுதியில் இவ்வுத்தியோகஸ்த்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஆனாலும் தமக்குரிய நிரந்தர நியமனம் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையிலேயே தற்போதும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி மீண்டும் இவ்வுத்தியோகஸ்த்தர்கள் கொழும்பில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக முன்னெடுத்துள்ளதை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment