மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை
வெள்ளத்தையடுத்து அழையாவிருந்தாளிகள் மனிதகுடியிருப்பு பிரதேசத்திற்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வந்தாறுமூலை வாவியில் காணப்பட்ட சுமார் ஒன்பது அடி நீளமான முதலை கொம்மாதுறை பிரதான வீதியோரமுள்ள பகுதிக்கு வந்தது.
இதையடுத்து அப்பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர்.
வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு விரைந்து வருகைதந்து பெரும் பிரயத்தனத்துடன் அந்த
முதலையைப் பிடித்து மண்முனை வாவியில் விட்டனர்.
ஏறாவூர்ப் பொலிஸாரும் இங்கு
பிரசன்னமாயிருந்ததை அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment