29 Jan 2021

விசாலமான தையல் பயிற்சி நிலையம் தாழங்குடாவில் திறந்து வைப்பு.

SHARE

(ரகு)


விசாலமான தையல் பயிற்சி நிலையம் தாழங்குடாவில் திறந்து வைப்பு.

கிழக்குமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்திற்கான விசாலமான தையல் பயிற்சி நிலையம் வெள்ளிக்கிழமை(29)  தாழங்குடாவில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாகராசா தனஞ்செயன் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கேசவமூர்த்தி மோகன், பிரேம்குமார் சிரேஷ்ட தையல்போதனாசிரியர் திருமதி நிவேதிதா ரவிச்சந்திரன், ஆகியோர் அதிதிகளாக பங்கேற்று நாடாவைவெட்டி புதிய கட்டடத்தினை திறப்பு விழா செய்து வைத்தனர்.

 இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பினை மண்முனைப்பற்று பிரதேச பதில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் துரையப்பா சசிகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுகிர்தலதா இன்பசாகரன் மற்றும் தாழங்குடா தையல் பயிற்சிநிலைய போதனாசிரியை திருமதி சந்திரிக்கா மகேந்திரராசாதாழக்குடா 153 ஆம் பிரிவு, கிராமிய அபிவிருத்தி சங்கதலைவர் இராசமணி கலைநேசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக இடப்பரப்புடன் கொண்ட பயிற்சி நெறிகளை பூரணமாக மேற்கொள்வதற்குரிய சகல உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளையும் கொண்டமைந்ததான பூரணத்துவம்பெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான தையல்பயிற்சி நிலையமாகவே இந்த தாழங்குடா தையல்பயிற்சி நிலையம் மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 






















SHARE

Author: verified_user

0 Comments: