அடச்சகல் குளத்தில் தற்போது 36 குடும்பங்கள் முழுநேர மீன்பிடியில் ஈடுபட்டு தங்களின் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்;ந்துவருகின்றனர். இம்மக்களுக்கு யானை தொல்லைகளுக்கு மத்தியில் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடமுடியாமலும் கால்நடைகளை வளர்ப்பதிலும் தங்களுக் சிக்கலுல்லமையினால் முழுக்கமுழுக்க மீன்பிடியில் ஈடுபடும் எமக்கு நிலையான நீர்மட்டத்தினை பேனுவதற்கான ஒரு பொறிமுறையினை நடைமுறைப்படுத்திதருமாறு அனைத்து மீனவர்களும் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கண்டியநாறுகுளம் கொக்கன்சேனைக்குளம் நல்லதன்னீர் ஓடைக்குளம் இரும்பன்டகுளம் அடச்சகல்குளம் ஆகிவை பருவகால குளங்களாக அடையாளம் கானப்பட்டுள்ள குளங்களுக்கு கிட்டத்தட்ட ஐந்தரை இலச்சம் மீன்குஞ்சுகள் விடப்படவுள்ளதாக மாவட்ட நீர் உயிரினவளப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜெகப் நெல்சன் தெரிவித்தார்.
உலக உணவு அமைப்பின்; ஆர்.5 எனும் திட்டத்தினுடாகவே முன்னெடுக்கப்படுகின்றது இதில் போசனமட்டத்தினை உயர்துவதாகும் அந்த அடிப்படையில் அம்மக்களின் உணவுக்கு போசாக்கான உணவினை அவர்கள் உண்பதற்கானதாகவே இத்திட்டம் அமைந்துள்ளது.
இன் நிகழ்வில் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவனீதன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், மண்முனை மேற்கு பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேஸ். மாவட்ட தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment