5 Oct 2020

அறிவிப்பாளர் ஏ.சி.எம். கலீலுர்றஹ்மான் காலமானார்.

SHARE


(ஏ.எச்.குசைன்)

அறிவிப்பாளர் ஏ.சி.எம். கலீலுர்றஹ்மான் காலமானார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும்; நேத்ரா தேசிய தொலைக்காட்சியிலும் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்த ஏ.சி.எம். கலீலுர்றஹ்மான ஞாயிறு 04.10.2020 இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

தனது 48ஆவது வயதில் காலமான கலீலுர்றஹ்மான் அவர்கள் சொல் வழு இல்லாது சிறந்த உச்சரிப்பும் நயமும் கொண்ட ஜனரஞ்சக அறிவிப்பாளராகும்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு எடுத்து வரப்பட்டு திங்கள்கிழமை மாலைநேர அஸர் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை கல்லரிச்சல், மரைக்கார் வீதி 297ஃ2 இலக்க முகவரி இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவைக் கேட்டு வானொலி தொலைக்காட்சி நேயர்களும் ஊடகத்துறையினரும் அனுதாபம் வெளியிட்டுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: