10 Oct 2020

களுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே!

SHARE
களுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே!
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளைக் கடலில் கரை வலை மீனவர்கள் தமது கரைவலை இழுக்கும் பகுதிக்குள் இனந்தெரியாத நபர்களினால் இரவில் மிகவும் சூட்சுமமான முறையில் கொங்கீட் தூண்கள், முட்கம்பிகள், மற்றும் மண்மூட்டைகளைக படகில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் செல்வதனால் கரைவலையில் மீன்களுக்குப்பதிலாக முட்கம்பிகளும். மண்மூட்டைகளும், கொங்கீட் தூண்களும்தான் அகப்படுவதாகவும், இதனால் தமது கரைவலைகள் அனைத்தும் அறுந்துபோய் பழுதடைந்துபோவதாகவும், மீன்கள் ஏதும் அகப்படாமல் தமது குடும்பங்கள் வருமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்தாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை (10) இவ்வாறு கடலில் கரைவலை இழுக்கும்போது வலை கடலில் தடைப்பட்டு இழுக்க முடியாமல் போயுள்ளது. பின்னர் இவ்விடையம் குறித்து மீனவர்கள் மட்டக்களப்பு மாவட்ட கடற்ழொறில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இஸ்த்தலத்திற்கு விரைந்த உதவிப் பணிப்பாளர் கரைவலை மீனவர்களின் நிலமையினை அவதானித்தார். பின்னர் மீனவர்கள் கல்முனைப் பகுதியிலிருந்து சுழியோடிகளை வரவழைத்து  கடலில் அமிழிந்திருந்த கொங்றீட் கட்டை, முட்கம்பி, மற்றும் மண்மூட்டை என்பவற்றை, மீட்டனர்.

தாம் பரைம்பரை பரைம்பரையாக இவ்வாறு கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றோம். இவ்வாறான நிலைமை இதுவரையில் ஏற்படவிலை;லை தற்போது அண்மைக்காலமாக நாம் தொழில் செய்து எமது குடும்பத்தைப் பாதுகாத்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் நாம் கரைவலையில் ஈடுபடும் கடற்பகுதியில் சிலர் இவ்வாறான பாராமாக பொருட்களையும் கழிவுகளையும், கடலில் போட்டுவிட்டுச் செல்வதனால் எம்மால் கடலில் தொழில் செய்ய முடியாதுள்ளது. இவ்வாறு அவர்கள் போட்டுவிட்டுச் செல்லும் பொருட்களை நாங்கள்தான் சுழியோடிகளை வாடகைக்கு அமர்த்தி அதனை மீள எடுக்க வேண்டும், அவ்வாறு ஒரு பொருளை மீள எடுப்பதற்கு 30000 ஆயிரம் கொடுக்க வேண்டியுள்ளது. எமக்கு மீன் படுவதே 1000 ரூபாவுக்குத்தான் என களுதாவளைக் கடலில் கரைவலையில் மீன்பிடிக்கும் கரைவலை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரைவலை மீனவர்கள் எதிர்கொண்டுள்ள நிலமை தொடர்பில் நான் நேரடியாக அவதானித்தேன் கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற வலைகளை சிலர் பயன்படுத்தி வந்தனர். அவற்றை நாம் விசேட அதிரடிப்படையினர், பொலிசார், இராணுவத்தினர், மற்றும் கரைவலை மீனவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் ஒத்துழைப்புடன் கைப்பற்றினோம். அதன் பின்னர் கரைவலை மீனவர்களின் தொழில் ஓரளவு விருத்தியடைந்திருந்தது. தற்போது அவ்வாறானவர்களால் இவ்வாறு கடலில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொண்டு போட்டுவிட்டுச் செல்வதாக கரைவலை மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மேல் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என இதனை நேரடியாக அவதானித்த  மட்டக்களப்பு மாவட்ட கடற்ழொறில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸின் தெரிவித்தார்.




















SHARE

Author: verified_user

0 Comments: