15 Sept 2020

கடலில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி சுருக்குவரைகள் மீட்பு.

SHARE


கடலில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி சுருக்குவரைகள் மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் தேத்தாதீவு கடற் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி சுருக்குவலையை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செவ்வாய்கிழமை (15) பிற்பகல் மீட்டுள்ளதாக கடற்றொழிற் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது….

பிரதேசத்திற்குப் பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர் தர்ஜனன், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர், ஆகியோர் ஒன்றிணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு நேரடியாக விஜயம் செய்த கடற்றொழிற் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ் உள்ளிட்ட குழுவினர் நிலமையை அவதானித்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அப்பகுதி கடற்றொழில் பரிசோதகருக்குக் கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிமிர்த்தம் கடலில் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி கடலில் மீன் பிடிப்பதற்கு அனுதியற்ற சுருக்கு வலைகளும், ஒரு இந்திரப்படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை சுமார் 10 இலெட்சம் ரூபாய் பெறுமதி எனவும், அற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  கடற்றொழிற் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ் தெரிவித்தார். 

அப்பகுதி கடற் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்றி சுருக்குவலைகளை சிலர் பயன்படுத்துவதாககவும், அவற்றைத் தடை செய்யுமாறும் கோரி கரைவலை மீனவர்கள் செவ்வாய்கிழமை(15) காலை களுதாவளை கடற்கரையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.














SHARE

Author: verified_user

0 Comments: