பின்னர் வலைகளை இழுக்க முடியாமல் இடை நடுவே எமது வலைகளை கத்தியால் இடை நடுவே அறுத்து எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
செவ்வாய்கிழமை (22) இதே கடற்கரையில் எதுவித அசம்பாவிதங்களுமின்றி கரைவலையிட்டு மீன்டித்தோம். இன்று இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இது போன்றதொரு நிலமை கடந்த வருடமும் எமக்கு ஏற்பட்டிருந்தது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீனர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் அப்பகுதி கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி ஒரு சிலர் மீன்பிடிப்பதாக கடற்றொழில் திணைகத்திற்கு குறித்த கரை வலை மீனவர்கள் தெரிவித்திருந்த நிலையில் துரிதமாகச் செயற்பட்ட கடற்றொழில் திணைக்கயத்தினர் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கடலில் பதுக்கி வைத்திருந்த மீன்பிடிப்பதற்கு அனுமதியற்ற 2 வலைகளைக் கைப்பற்றியதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனைப் பெறுத்துக் கொள்ளாத நபர்களாலேயே தமது கரை வலை மீன்பிடியைத் தடைசெய்யும் வண்ணம் இவ்வாறு கடலில் கற்தூண்களைப் மிகவும் சூட்சுமமான முறையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக கரைவலை மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனால் தாம் லெட்சக்கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், தமது வலைகளும் முற்றுமுழுதாக இல்லாமால் போயுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கரை வலை இழுப்பதற்காக நாளாந்த தொழிலுக்கு வந்த கூலி வேலையாட்களும், தமக்கு இன்றயதினம் தொழிலில்லாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும், இனிமேல் புதிதாக வலைகளைக் கொள்வனவு செய்துதான் மீண்டும் தொழிலுக்குத் திரும்ப வேண்டும். எனவே அரசாங்கம் எமக்கு நட்ட ஈட்டைப் பெற்றுத் தருவதோடு. சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராhக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலமை தொடர்பில் குறித்த மீனவர்கள் களுவதாவளைக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கைக் கடற்படையினரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலையில் இடப்பட்டுள்ள கற்தூண் துண்டங்களை தாம் அப்புறப்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளதாகவும். தமக்கு ஏற்பட்டுள்ள இந்நிலமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் களுதாவளை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் செல்லையா இராமலிங்கம் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment