கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தினால் தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) மட்டக்களப்பு பிரதம தபாலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது இராஜாங்க அமைச்சரை கௌரவிக்கும் முகமாக அஞ்சல் திணைக்களத்தின் தொழிற்சங்களின் பிரதிநிதிகளால் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்படன.
கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தபால் திணைக்களத்தின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment