இப்பயிற்சி நெறியினை அவ்வப் பிரதேச சௌலாளர் பிரிவுகளில் நடாத்துவதற்காக துறைசார்ந்த வளவாளர்களை இனங்கண்டு பெற்றுக் கொள்வது தொடர்பாக, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான முன்னோடிக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் புதன்கிழமை (15) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது விண்ணப்பதாரர்கள் தாம் விண்ணப்பித்த விவசாயம், கால்நடை, மீண்பிடி, தச்சுத் தொழில், உருக்கி ஒட்டுதல் (வெல்டிங்), நட்சத்திர தரத்திலான ஹோட்டல் முகாமைத்துவம், தையல், அழகுக்கலை போன்ற 26 துறைகளில் பயிற்சிகள் வழங்குவதற்கான வளவாளர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இப்பயிற்சினை வழங்கவுள்ள வளவாளர்களுடனான கலந்துரையாடல் அவ்வப் பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் 20, 21, 23, 24 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் திட்டமிடல் பணிப்பாளர் ரொவான் ரொட்டிகோ மற்றும் அதன் மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம் மௌலானா, மற்றும் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
0 Comments:
Post a Comment