மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள மாங்காடு கிராமத்தில்; திங்கட்கிழமை (20) மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
அபிவிருத்தி தேவை என எமது மக்கள் உணர்ந்து விட்டனர், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தற்போது அபிவிருத்தி தேவை என்றுதான் சொல்கின்றது. அவர்கள் அவர்களே அவ்வாறு சொன்னால் ஏன் நாங்கள் அதனை முன்னின்று செய்யக்கூடாது, எனக்கு அரசியல் தெரியாது சொல்வதை செய்து தருவேன். நான் சொன்னால் அதை செய்வேன்.
சிலர் நாடாளுமன்றம் போனால் ஆங்கிலத்தில் கதைத்தால் எல்லாவற்றையும், பெற்றுவிடலாம் என நினைக்கின்றார்கள், அவ்வாறானவர்கள் யாரும், அவ்வாறு நாடாளுமன்றம் போய் கதைத்து வாதாடி எதையும் பெற்று வந்தது கிடையாது.
எமக்கு ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும், நமது கட்சிக்காரர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் அவர்களிடம் நேரடியாக நாம் நினைத்ததைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
இம்முறை எமது பெரமுன கட்சியில் நீங்கள் யாருக்காவது காக்களியுங்கள் ஆனால் நிட்சயமாக மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நான் தகுதி இல்லை என மக்கள் நினைத்தால் நீங்கள் மொட்டுக்கு மாத்திரம் வாக்களியுங்கள், எனது கனவு ஆளும் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் அமைச்சர் வரவேண்டும் என்பதுதான்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கைகளும் இருந்தால் போதும் அதுவே அவர்களின் தகுதியுமாகும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் இரண்டு கைகளையுமு; உயர்த்தினால், ஒரு கோடி கிடைக்கும் அந்த கையினை வைத்துத்தான் அவர்களது வாழ்க்கை ஓடுகின்றது. இரண்டு கையும் சரியில்லாதோர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தல் கேட்க முடியாது.
எதிர்வரும் 15 வருடங்களுக்கு எமது பொதுஜன பெரமுனக் கட்சியின், ஆட்சி இருக்கும். ஆகையால் இந்த ஆட்சியுடன் இணைந்து போனால் எமது மக்களுக்கு ஏராளமான அபிவிருத்தியை கொண்டு வரலாம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் அக் கட்சியின் வேட்பாளருமான பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment