27 Jul 2020

அரசியல் பிரசாரங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் இடம்பெறக்கூடாது - மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை.

SHARE
அரசியல் பிரசாரங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் இடம்பெறக்கூடாது - மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்காள இயங்கி வருகின்றது. இதுவரை கலமும் குறிப்பிடக்கூடிய பல வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது. மதங்களுக்கடையே, இனங்களுக்கடையே முரண்பாடுகள் வராமல் செயற்படுவதுதான் எமது அமைப்பின் மிக முக்கிய நோக்கமாகவுள்ளது. இதுபோன்று இலங்கையில் 18 மாவட்டங்களில் தேசிய சமாதான பேரவை முன்னின்று கொண்டு நடாத்தி வருகின்றது. அதுபோல் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத சமாதான பேரவை இம்மாவட்டத்தில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் சில பிரச்சனைகள் வரும்போது அதனைத் தீர்த்து வைப்பதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சிவில் சமூகத்தின் வகிபாகம் என்ன என்பதற்கிணங்க சிவில் சமூகமாகிய மக்கள் எவ்வாறு வருகின்ற தேர்தலில் செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் நாஙம் கலந்துரையாடினோம். அந்த வகையில அரசியல் பிரசாரங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் இடம்பெறக்கூடாது. என  மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையும், சிவில் சமூக அரங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

நடைபெறவுள்ள தேர்தலுக்காகவேண்டி தற்போது பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பிரசார நடவடிக்கைகளில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள், பொய் பிரசாரங்கள், வாந்திகள் இடம்பெறக்கூடாது, நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமானதும், ஜனநாயகரீதியிலும் நடைபெறவேண்டும்,. என்பதுதான் எமது முக்கியமான குறிக்கோளாகும்.

இந்த தேர்தலுக்காக வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்கள் மூலம் இனங்களுக்கோ, தமங்களுக்கோ, எதுவித முரண்பாடுகளும், பிரச்சனைகளும், வரக்கூடாது என்பதுவும் எமது வேலைத்திட்டமாகும். இதன்போது முக்கியமாக சில பிரச்சனைகள் வருகின்றபோது, மக்கள் அவர்களது சமயத் தலைவர்களிடத்தில்தான் அவர்களது பிரச்சனைகளைத் தெரிவிக்கின்றார்கள். அந்த வகையில் சமயத் தலைவர்களாக இருந்தலும், அவர்கள் குறித்த பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு மத்தியஸ்த்தம், இனமுரண்பாடுகளைத் தீர்த்துவைத்தல், வன்முறையற்ற போச்சுக்கள்,  போன்ற பல்வேறுபட்ட பயிற்சிகளை எமது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை வழங்கியுள்ளது. எம்மால் வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு, எமது மதத் தலைவர்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது அவற்றுக்குத் தீர்வுகண்டு வருகின்றார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவை உறுப்பினர்கள், தேசிய சமாதான பேரவையின் அதிகாரிகள், இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்த்தவ மதத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு,  வெறுக்கத்தக்க பேச்சுக்கள், வன்முறையற்றதும், சுதந்திரமானதுமான தேர்தல், தொடர்பிலும் இதன்போது கலந்து கொண்ட மதத்தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: