(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பில் தேர்தல்கள் உதவி ஆணையாளருக்கான உத்தியோகபூர்வவாசஸ்தலம் திறந்து வைப்பு.
மட்டக்களப்பில்தேர்தல்கள் உதவி ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஞாயிற்றுக்கிழமை 05.07.2020 திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்லடியில்அமைக்கப்பட்டுள்ள வாசஸ்தலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தேர்தல்கள்ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட தேர்தல்கள்முன்னாள் ஆணையாளர் நாயகம் எம் எம் எம். முஹம்மத் மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதிபத்மராஜா மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் எம் என் மெண்டிஸ் ஆகியோரும்இன்னும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment