புளுக்குணாவி குளநீரைநம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து களுகல் ஓயா நீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் பிறமாவட்டத்தில் இருந்து நீர் பெற்றுக்கொடுத்தமை என்பது இதுதான் முதல்தடவை என்றும் இது முழுக்க முழுக்க அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் அயராத முயற்ச்சி என்றும் பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் பாராட்டுத் தெரிவித்தார்.
புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயம் செய்கை பண்ணப்பட வேண்டிய இரண்டாயிரத்திதொழாயிரத்தி என்பது (2980) ஏக்ருக்கான அனுமதிமாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் அதற்குமேலதிகமாக ஜநூறு (500) ஏக்கர்களை செய்கை பண்ணப்பட்டதினால் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாத காரனத்தினால் மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்து நீரை பாவிப்பதுதொடர்பாக மத்திய நீர்ப்பாச நிணைக்களத்துடன் உரையாடியபோது பிரதிப்பணிப்பாளர் எம்.வி.எம்.அசார் நவகிரி கன்ட விவசாயிகளுக்கு போதுமான நீர்மாத்திரம் தங்களிடம் உள்ளதினால் புளுக்குணாவி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததைத்தொடர்ந்து மாற்றுவளி ஒன்று தேவைப்பட்டது.
அதன் அடிப்படையில் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் உரையாடலை மேற்கொண்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தொடர்ந்து நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நயகத்தின் அனுமதியுடன் மத்திய மாகாண பணிப்பாளர்களுடனும் உரையாடி விவசாயிகளின் விளைநிலங்களை அழிந்து பாதுகாத்துள்ளமையை விவசாய பொதுமக்களும் பாரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதலைமடுக்கன்டம், வாழைக்காலை, மாவடிமுன்மாரி, ஆலையடிமுன்மாரி, ஆகிய கன்டங்களுக்கு களுகல் ஓயாவில் இருந்து 1500 ஏக்கர் அடி நீர் நவகிரிக்கு அனுப்பபட்டு தற்போது புளுக்குணாவி குளத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
உணவு உற்பத்தியினை பாதுகாத்தல் உணவு உற்பத்தியினை ஊக்கப்படுத்தல் எனும் அடிப்படையில் முயற்சி எடுத்த அம்பாறை மட்டக்களப்பு அரசாங்க அதிபர்கள் மத்திய மாகாண நீர்பாசண திணைக்கள பணிப்பாளர்கள் மத்திய நீர் பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரதேச செயலாளர்கள் பொறியலாளர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment