(விஜய்)
சாமித்தம்பி கிருபைராஜா அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்.
துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் சாமித்தம்பி கிருபைராஜா அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்கலவன் பாடசாலையின் அதிபரும், சிறந்த தமிழ் புலமையாளரும், சமயப்பற்றாளருமான சாமித்தம்பி கிருபைராஜா மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரீ.கருணாகரன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக 2020.05.19 திகதியன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் 01.06.1992 இல் அரசசேவையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். பேராதெனிய பல்கலைக் கழகத்தில் படிப்பை மேற்கொண்டு கலைப்பட்டதாரியாக தனது பட்டத்தை முடித்துக் கொண்டு ஆசிரியராக கடமையாற்றி வந்தார். இவர் 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயம், இலுப்பைக்குளம் சரஸ்வதி வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் அதிபராகவும், துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பிரதியதிபராகவும், கடமையாற்றி தற்போது துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வருகின்றார். இவர் துறைநீலாவணை இந்து இளைஞர் மன்றம்.ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையில் தலைவராக இருந்து பல சமூக, சமயப்பணிகளை முன்னெடுத்து வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments:
Post a Comment