மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களை கொரோனாவைரஸில் பாதுகாக்க பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள்.
இந்த ஏற்பாடுகளுக்கமைய மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலைகளின் பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள் செவ்வாய்க்கிழமை (02) மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை வின்சென்ட் மகளீர் உயர்தர தேசியபாடசாலைகளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எம்.அச்சுதனின் வழிகாட்டுதலில் புளியந்தீவு பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்புசுகாதார வளிமுறைகல் பற்றி தெளிவுபடுத்தப்பட்டதுடன் தமதுபிள்ளைகளுக்கு அவதானமாக பின்பற்ற அறிவூட்டுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் பயஸ்பத்மராஜா வின்சென்ட் மகளீர் உயர்தர தேசியபாடசாலை அதிபர் திருமதி தவதிருமகள் சுகுமார் உட்பட பல அதிகாரிகளும் பெருமளவு பெற்றோரும் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment