18 Jun 2020

ஜனாதிபதியின் கிராமத்திக்கோர் வீடு எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் வீடுகள் கையளிப்பு.

SHARE
 ஜனாதிபதியின் கிராமத்திக்கோர் வீடு எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் வீடுகள் கையளிப்பு.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டைக் கட்யெழுப்பும் சுவீட்சமான நோக்கு எனும் எண்ணக்கருவுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம் எனும் திட்டத்திற்கமைய கிராமத்திக்கு ஒரு வீடு எனும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக பிரிவின் சந்திவெளி பிரதேசத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணிப் பிரதேசத்திலும்  தலா ஆறு இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட புதிய இரு வீடுகள் வியாழக்கிழமை (18) பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலக பிரிவின் சந்திவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் திறப்பு விழா இப்பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைத்து வறுமைக் குடும்பம் ஒன்றிடம் புதியவீட்டினைக் கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவின் ஐயங்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா திறந்து வைத்து தெரிவு செய்யப்பட்ட மற்றொரு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிக்கு கையளிக்கப்பட்டதாக மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

இந்த திறப்பு விழா நிகழ்வுகளில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல்அமீன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் வீ.ஜெகநாதன், உட்பட பல அரச அதிகாரிகளும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த ஆண்டுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 344 கிரம சேவகர் பிரிவுகளிலும் இந்த இலவச வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் உத்திதேசித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆரம்பித்த இவ்வீட்டுத்திட்டப் பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்படுவதையிட்டு தான் மகிழ்சியடைவதுடன் இதனை நிறுவிய தேசிய வீடமைப்பு அதிகார சபை, பங்களிப்புச் செய்த பிரதேச செயலகம், மற்றும் இத்திட்டத்திற்கு மேலதிக நிதியுதவியை வழங்கிய பரோபகாரிகள் அனைவருக்கும் நன்றி பாராட்ட இச்சந்தர்ப்பத்தில் கடமைப்பட்டுள்ளேன். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வீடில்லாத மக்களுக்கே இந்த வீட்டு வசதி கிடைப்பதற்கு இன்றைய அரசாங்கம் வழிசெய்திருக்கினறது. ஏதிர் காலத்திலும் வீடில்லாத மக்களுக்கு வீட்டு வசதிகளை வழங்க புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: