மின்சார வேலியில் பாய்ந்த மின் தாக்கி விவசாயி பலி.
மின்சார வேலியில் பாய்ந்த மின் தாக்கி விவசாயி ஒருவர் பலியான சம்பவம் செவ்வாய்க்கிழமை 02.06.2020 அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி பொலிஸ பிரிவிலடங்கும் சுரவணையடியூற்றுக் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி சந்திரசேகரம் (வயது 60) என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்தவராகும்.
இவர் வழமைபோன்று தனது மாட்டுப்பட்டியடிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றுள்ளார். முன்னதாக அங்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு விவசாயிகளால் நிறுவப்பட்டிருந்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் வேலியைக் கடக்க முற்பட்டபோது அவர் மின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சடலம் பிரேதக் கூறாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
\
0 Comments:
Post a Comment